திருச்சிராப்பள்ளி, செப்.24- திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட சமுத்திரம் ஊராட்சி பகுதிகளான காந்தி நகர் மற்றும் கக் கன்ஜி நகர் பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்தப் பகுதிகளில் ஆழ்குழாய், ஐந் துக்கும் மேற்பட்ட அடிபம்பு இருந்தும் செயல்பாட்டில் இல்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காந்தி நகர் கிளை சார்பில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. கை யெழுத்து இயக்கத்தை இந்திய ஜன நாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு தொடக்கி வைத்தார். கட்சியின் வட்ட குழு உறுப்பினர் தங்க ராஜ், காந்தி நகர் கிளை செயலாளர் சக்திவேல், வாலிபர் சங்கத்தின் கிளை செயலாளர் தமிழரசன் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.