tamilnadu

img

பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு

திருச்சிராப்பள்ளி, நவ.2- மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருச்சி –கரூர்- பெரம்பலூர்- புதுக் கோட்டை மாவட்டக்குழுவின் 34 வது ஆண்டு மாவட்ட மாநாடு திருச்சி யில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு திருச்சி மாவட்டக் குழு தலைவர் ரவி தலைமை  வகித்தார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொ துச்செயலாளர் ரமேஷ் துவக்கவுரை யாற்றினார். திருச்சி மாவட்ட செய லாளர் ராஜன் ஆண்டறிக்கையை வாசித்தார். ஐசிஇயு தஞ்சைக் கோட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் விவாதத்தை துவக்கி வைத்து பேசினார்.  மாநாட்டில் பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1.8.2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைத்திட வேண்டும். வாகன மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும்.  பதவி உயர்வு கொள்கையில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதவி உயர்வு நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து புதுக்கோட்டை மாவட்டக்குழு உறுப்பினர் ஷாம்லி, பெரம்பலூர் செயலாளர் சதீஷ்குமார், கரூர் கிளை செயலாளர் ஸ்ரீவித்யா ஆகி யோர் பேசினர். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உதவித் தலைவர் புஷ்பராஜன் நிறைவுரையாற்றினார். முன்னதாக மண்டலக்குழு உறுப்பினர் சாய் அருணா வரவேற்றார்.  திருச்சி கிளை தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.