tamilnadu

குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு நூறு நாள் வேலை செய்ய அனுமதி மறுப்பு ஆட்சியர் தீர்வு காண விதொச கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 29- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் தங்கதுரை மாவட்ட ஆட்சியர் சிவராசுவிற்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்த நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் இணைப்பு சம்ப ந்தமாக துண்டு பிரசுரமும் விளம்பரம் செய்ய ப்பட்டது. குடிநீர் இணைப்பு பெற்ற பயனாளி களிடம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் சென்று  ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். தவ றினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வாய்மொழியாக எச்சிரிக்கை விடுக்கி ன்றனர். மேற்படி பயனாளிகள் வைப்புத் தொகை கட்டியிருந்தும் மேலும் ஏன் ரூ.1000  செலுத்த வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுகிறது.

 ஆகவே, இக்குழப்பத்திற்கு தீர்வு காணும்  வகையில் ஊராட்சி மன்ற அறிவிப்பு பல கையில் குடிநீர் இணைப்பு பெற்று வைப்பு தொகை செலுத்தியவர்கள் பயனாளிகள் பெயரை பட்டியல் ஒட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், கொரோனா கால த்தில் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துவதை தவிர்க்க வேண்டு கிறேன். பல ஊராட்சிகளில் குடிநீர் கட்டணம்  செலுத்தவில்லை என்றால் 100 நாள் வேலை தரமுடியாது என்று கூறுகிறார்கள். எனவே, தாங்கள் ஊராட்சி மூலம் குடிநீர்  இணைப்பு பெற வைப்பு தொகை செலுத்திய  பயனாளிகள் பட்டியலை அறிவிப்பு பலகை யில் ஒட்டுவதற்கும், கொரோனா காலத்தில்  குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்  தரும்படியும், குடிநீர் கட்டணம் செலுத்தாத வர்கள் 100 நாள் வேலை செய்ய அனும திக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.