tamilnadu

img

நூறு நாள்வேலைத்திட்ட தொழிலாளர்கள் வேலையின்றி அவதி மற்ற மாவட்டங்கள் போல் வேலை வழங்க விதொச கோரிக்கை

தேனி
தேனி  மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக வேலையின்றி தவிக்கும் நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் வேலை வழங்குவது போல வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேனி மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது .

இது குறித்து சங்கத்தின் தேனி மாவட்டக்குழு தலைவர் கே.தயாளன் ,மாவட்டசெயலாளர் ஏ.வி.அண்ணாமலை ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .தேனி மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட  விவசாய தொழிலாளர்கள் கடந்த 35 நாட்களாக கொரோனா  ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசு கொடுத்த ரேசன் பொருட்களும், ரூ1000மும் 5 நாட்களுக்கு கூட போதாமல் பட்டினியால் வாடி போயுள்ளனர். அவர்களை காப்பாற்ற அரசு உடனடியாக நூறு நாள் வேலைத்திட்டத்தை  தேனி மாவட்டத்தில் உடனடியாக துவக்க வேண்டுகிறோம் .குறிப்பாக தஞ்சையில் 13000 பேருக்கும்,திருச்சியில் 7000 பேருக்கும் செவ்வாய்க்கிழமை முதல் நூறுநாள் வேலை திட்டத்தில்  வேலை கொடுத்தாக தெரிகிறது .

எனவே தேனி ஆட்சியர்  முதல்கட்டமாக  குறைந்த பட்சம்  ஒன்றியத்திற்கு 10 ஊராட்சிகள் வீதமும் 10 பேர் வீதம் மாஸ்க் கட்டி சமூக இடைவெளியோடு வேலை வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தியுள்ளனர் .