திருச்சிராப்பள்ளி,மார்ச் 19- திருச்சி நாகப்பா கார்ப்பரேசன் தொழிலாளர்கள் 20 பேர் பிரதானமாக வேலை செய்த டைல்ஸ் லோடுகளை வேறு கடைகளுக்கு மாற்றிவிட்டு தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை அழிப்ப தை கைவிட வேண்டும். புதிதாக தொ டங்கப்பட்ட டைல்ஸ் கடையில் அவர்க ளுக்கு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழனன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. திருவானைக்காவல் கொண்டை யம்பேட்டை பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த டைல்ஸ் கடை முன் குடும்பத்துடன் நடைபெற்ற போ ராட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் சங்க மாவட்ட துணைச்செயலாளர்கள் குமார், ரமேஷ், லாரிசெட் சங்க தலைவர் கணேசன், பிரிட்டானியா சங்க தலைவர் நாகராஜ், நாகப்பா, சுமைப்பணி சங்க நிர்வாகி கள் பழனி, சண்முகம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
அதிகாரிகளுடன் பேச்சு நடத்த முடிவு
பின்னர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் ஸ்ரீதர் தலை மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதால் 20 நாட்களுக்கு பின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிக ளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்பது என முடிவானது. இதனை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.