திருச்சிராப்பள்ளி, டிச.16- பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது அதிகரித்து வரும் பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்முறைக ளுக்கெதிரான அகில இந்திய கண்டன நாள் திங்களன்று அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி பாலியல் குற்றங்களை குறிப்பிட்ட காலத்திற் குள் விசாரித்து தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும். நிர்பயா நிதியை விரைந்து பயன்படுத்த வேண்டும். வேலை செய்யும் பெண்க ளுக்கு, வெளியில் செல்லும் சிறுமிக ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திங்களன்று வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டாவில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் செல்வி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடிய மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலை வர் ராமர், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்டத் தலைவர் ரேணுகா ஆகி யோர் பேசினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், பிரமிளா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனு, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டி யில் செலுத்தப்பட்;டது. இதே போல் மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணை ப்புக்குழு சார்பில் திங்களன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. தமிழ்செல்வி தலைமை வகித்தார். மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், வட்ட பொருளாளர் இருதயராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ராஜலெட்சுமி, வசுதா பேகம், ராதா, ஜான்போஸ்கோ ரவி, சீனிவாசன் உள்பட பொதுமக்கள் கையெழுத்திட்டனர். சுகந்தி நன்றி கூறினார்.