tamilnadu

img

கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், மே 13-பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் சேவை திட்ட துவக்க விழா மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ்-அப் சமூக வலைதள சேவைக்குழு சார்பில் நடைபெற்றது. தொழிலதிபர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சேவைக்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், சரவணசாமி, கருணை இல்ல நிர்வாகி அருண் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன், இரண்டு மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகையை வழங்கினார். இதை தொடர்ந்து கருணை இல்லத்தில் உள்ள 100-க்கு மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளர் கீதா, குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ராணி, துரைமுருகன், தீபா, சரண்யா, சத்யா,பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். முன்னதாக சீனிவாசன் வரவேற்றார். பூபதி நன்றி கூறினார். பெரம்பலூர் ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ்-அப் சமூக வலைதளசேவைக்குழு, இயன்றதை செய்வோம் இல்லாதவற்கு என்ற நோக்கில் ஏழை-எளியோருக்கு மருத்துவ செலவு,கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.