districts

காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை

தூத்துக்குடி,மே27-  தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் துறையினரின் வாரிசுகளில் மேல்நிலை பள்ளிப் படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ள வர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின்உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்விஉதவித் தொகை யாக ரூ. 25,000 வரை வழங்கப்படும். அதன்படி 2020 - 2021 ஆண்டில் மாநில  அளவில் முதல் 100 இடங்க ளை பிடித்த காவல்துறையி னரின் வாரிசுகளின் உயர் கல்விக்கான கல்வி உதவி தொகை முதல் மற்றும் 2வது தவணையாக வெள்ளியன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வழங்கினார்.