tamilnadu

img

கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி ஜூன் 16- திருநெல்வேலி வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக், சாதி ஆதிக்க வெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டம் செம்பனார்கோயில் கடைவீதியில் சங்கத்தின் வட்டத் தலைவர் வீ.எம்சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.