திருச்சிராப்பள்ளி, மார்ச் 17- ஜன.8 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் பகுதி சுயஉதவிக்குழு துப்புரவு தொழிலாளர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இவர்களை பழி வாங்கும் நோக்கில் அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் திருஞானம் மற்றும் சுகாதார ஆய்வாளர் பரசுரா மன், ஸ்ரீரங்கம் கோட்ட சுகாதார ஆய்வா ளர் டேவிட் ஆகியோர் வேலை நீக்கம் செய்தனர். இதனை கண்டித்தும், மீண்டும் வேலை வழங்கக் கோரியும் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர் போராட்டத்திற்கு பின் கிழக்கு தாசில் தார் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. பின்னர் தொடர் காத்திருப்புப் போ ராட்டத்தையடுத்து பிப். 3-ஆம் தேதி ஆடிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் 20 ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கு வது என முடிவானது. ஆனால் பேச்சு வார்த்தையின்படி வேலை வழங்க வில்லை. இதைதொடர்ந்து மீண்டும் வேலை வழங்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வா யன்று காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாநில சம்மேளன பொதுச்செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் ராமர் ஆகியோர் பேசினர். பின்னர் மாநகராட்சி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், துப்புரவுத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் கணேசன், தமிழ்நாடு கிராம பஞ்சா யத்து ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.