திருச்சிராப்பள்ளி: ஜனவரி 8-ந் தேதி நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் பணிபுரிந்த 20 துப்புரவு தொழிலாளிகளை மாநகராட்சி அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்துடன் வேலையை விட்டு நீக்கியது. இதைதொடர்ந்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஞாயிறு அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் 20 துப்புரவு தொழிலாளர்களு க்கு 25 கிலோ அரிசியும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன. துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா, செயலாளர் மாறன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜன், பொருளாளர் காளிராஜ், மார்க்சி ஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதி குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேலை இழந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு தமுஎகச மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ரூ 1000 நிதி வழங்கினார்.