குடவாசல், ஏப்.12-குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள், மாவட்ட ஊரகஉள்ளாட்சி வளர்ச்சித் துறை அலுவலக மையத்தில் இருந்து தினமும்காலையில் வயர்லெஸ்சில் தொடர்பு கொண்டு ரெகுலர் வேலைகளைப் பற்றி தொடர்ந்து 2 மணி நேரம் ஆய்வு, பின்னர் மாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகளை நேரடி ஆய்வு என்ற பெயரில்அலுவலர்களுக்கு மன உளைச் சலை ஏற்படுத்தி வருவதாக புகார்எழுந்துள்ளது. இதனை கண்டித்து ஊரக உள் ளாட்சி வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பாக தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் மற்றும் தலைமைச் திருவாரூர் செயலகம், மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஊழியர்களிடம் உயர் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாக புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து ஊரக உள்ளாட்சி வளர்ச்சித் துறையின் மாவட்ட தலைவரும், அரசு ஊழியர் சங்க குடவாசல் வட்டத் தலைவருமான சி.சுந்தரலிங்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறும்போது, எங்களுக்கு தேர்தல் பணிக்கான வேலைகளை ஒப்படைத்து விட்டு தற்போது ஊராட்சி ஒன்றிய பணிகள் தேக்கமடைந்து உள்ளன. தமிழக அரசு அறிவித்த 2000 ரூபாய் கணக்கெடுப்பு உள் ளிட்டவை பணிகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் நடைமுறை அமலில்உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி தினந்தோறும் காலை 9 மணியிலிருந்து வயர் லெஸ்ஸில் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதை உடனே திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கவன ஈர்ப்புபோராட்டம் நடைபெறும் என்றனர்.