திருச்சிராப்பள்ளி, ஜூலை 27- வீட்டுவரி சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி 3 ஆண்டுகளுக்கு முன் தேதியிட்டு வரி கட்டவில்லை என்றால் ஜப்தி எனும் மிரட்டல் அறிவிப்பையும், வரி உயர்வையும் கைவிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தி அதன் பின் வரி நிர்ணயம் செய்து வசூல் செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகத்தை தினந் தோறும் வழங்க வேண்டும். துவாக்குடி முதல் பால்பண்ணை வரை திருச்சி– தஞ்சை நெடுஞ்சாலை யின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிக்குழு சார்பில் வெள்ளி யன்று காட்டூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், லெனின், பகுதி செயலாளர் மணிமாறன், பகுதிக்குழு உறுப்பினர் தங்கதுரை ஆகியோர் பேசி னர். கிளை செயலாளர்கள் நல்லை யன், மரியசெல்வம் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசின் கல்வி கொள்கைக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மரியராஜ் நன்றி கூறினார்.