குளித்தலை, ஜூலை 2- வறட்சி காரணமாக 100 நாள் வேலையை 200 நாள் ஆக உயர்த்தி சம்பளம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வழங்க வேண்டும். குளித்தலை ஒன்றியத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் மாவட்ட குழு உறுப்பினர் வடிவேல் ஒன்றிய செயலாளர் மற்றும் வாலி பர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் மு.க.சிவா, பிரபாகர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.