தரங்கம்பாடி, மே 23-நாகை மாவட்டம் சீர்காழி மாதானம் முதல் மேமாத்தூர் வரை 30 கி.மீ தொலைவுக்கு விளை நிலங்கள் வழியாக ஷேல் கேஸ் கொண்டு செல்ல ராட்சச குழாய்களை கடந்த சில நாட்களாக அராஜக முறையில் பதித்து வருகிறது. போராட்டம் நடத்துகிற விவசாயிகளை மிரட்டுவது, கைது செய்து பல்வேறு வழக்குகளை பதிந்து வரும் நிலையில் இத்திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும், விவசாயிகள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செம்பனார்கோவில் கடைவீதியில் புதனன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். மாநில தலைவர் வி.சுப்ரமணியன், மாநில துணை செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், பொருளாளர் டி.இராசையன், மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பி.சீனிவாசன், சிம்சன், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் இராயர், சாமித்துரை, நாகையா, ஜான்டேவிட், கோவிந்தராஜ்,மாரியப்பன், வைரவன், விசாலாட்சி ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.