tamilnadu

img

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

 திருச்சிராப்பள்ளி, ஜூலை 23- மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப் பட்ட வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அநியாயமாக உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்க திருச்சி புறநகர் முசிறி கிளைகள் சார்பில் செவ்வாயன்று முசிறி கைக்காட்டி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்க கைக்காட்டி கிளை தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்ட் கிளை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், ஆட்டோ ஊழியர் சங்க புறநகர் மாவட்ட செயலா ளர் சம்பத், மாவட்ட தலைவர் நவமணி, பொருளாளர் சந்திரசேகர், துணை செயலாளர் பார்த்திபன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நம்பர் 1 டோல்கேட், நொச்சியம், முசிறி, லால்குடி பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலை வர் ரவிக்குமர் நன்றி கூறினார்.