திருச்சிராப்பள்ளி, பிப்.10- மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து கடந்த ஜன 8-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடை பெற்றது. திருச்சியில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் பகுதி சுயஉதவிக்குழு துப்புரவு தொழிலாளர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதனால் இவர்க ளை பழிவாங்கும் எண்ணத்துடன் 20 தொழிலா ளர்களையும் வேலை நீக்கம் செய்தனர். இதனை கண்டித்தும், பணிநீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் துப்புரவு தொழிலாளர்களுக் வேலை வழங்கப்பட வில்லை. இதனை கண்டித்து சிஐடியு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி மூலம் சென்னை நகராட்சி நிர்வாக ஆணை யருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக அரிய மங்கலம் கோட்ட உதவி ஆணையர் துரித நட வடிக்கை மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு இறுதி முடிவெடுப்பது என முடிவானது. ஆனால் ஒருவாரம் காலம் ஆகியும் துப்புரவு தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட 20 துப்புரவு தொழிலாளர்களும் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து வேலை வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்சி மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக துப்புரவு தொழில் செய்து வருகிறோம். கடந்த 9 ஆம் தேதி வேலைக்கு சென்ற எங்களை வேலைக்கு வர வேண்டாம் என அனுப்பி விட்டனர். இதுகுறித்து கடந்த 3-ஆம் தேதி ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் வேலைக்கு எடுத்துக் கொள்கி றோம் என உத்தரவாதம் கொடுத்தும் இதுவரை எங்களுக்கு வேலை வழங்கவில்லை. கடந்த ஒரு மாத காலமாக எங்களுக்கு வேலை யில்லாமல் சாப்பாட்டிற்கே மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு வில் தெரிவித்திருந்தனர். மனுவை கொடுத்த போது துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் மாறன், விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.