திருச்சிராப்பள்ளி, அக்.31- நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டினை மீண்டும் வழங்க வேண்டும். காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த 25ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட் டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, மணப் பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் என 500 க்கும் மேற் பட்ட அரசு டாக்டர்கள் தொடர்ந்து 7 வது நாளாக வியாழனன்றும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கி.ஆ.பெ.மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிஆபெ மருத்துவக் கல்லூரிக்கு வியாழனன்று சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர் ரபீக் ஆகியோர் மருத்துவர்கள் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேசிய தாவது: போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்க ளை பணியிட மாறுதல் செய்துள்ளனர். போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம் வெற்றி பெற முடியாது. இது மருத்துவர்கள் பிரச்சனை அல்ல. இது மக்கள் பிரச்சனை. மத்திய அரசு பணியில் சேரும் மருத்துவருக்கும், மாநில அரசு பணியில் சேரும் மருத்துவ ருக்கும் ஒரே சம்பளம் வழங்கப்படு கிறது. 10 ஆண்டுக்கு பின் மத்திய அரசு மருத்துவருக்கு வழங்கும் ஊதியம் மாநில அரசு மருத்துவருக்கு வழங்குவ தில்லை. மாநில அரசு மருத்துவர்களின் அனுபவத்திற்கான உரிய மரியாதை கிடைப்பதில்லை. கூடுதல் மருத்துவர் களை நியமிக்க வேண்டும். காலி பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை சாதாரண மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப்படும் கோரிக்கை. மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு வழங்கு வதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்கும். ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் வழங்குவது போல் மருத்துவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் செய்தால் ஊழல் ஒழிக் கப்படும். மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து பணி செய்தால் மேலும் சிறப்பாக மக்கள் பணி யாற்ற முடியும். பல கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தி எதுவும் நடக்கா ததால் தான் வேலை நிறுத்த போராட்டத் தில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். போராடும் சங்கங்களை விட்டு விட்டு போராடாத சங்கங்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது. இந்த போராட்டம் மக்களுடைய வாழ்க்கைக்கான போராட்டம். இங்கு மருத்துவத்தையும், மருத்துவர்களையும் மதிக்காத அரசாக உள்ளது. இவர்க ளின் கோரிக்கைகளை அரசு நிறை வேற்றாவிட்டால் மருத்துவர்கள் போராட் டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும் பணியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும். உங்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என்றார். டாக்டர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்ட போதிலும் பொதுமக்கள் நலன் கருதி உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களில் ஒரு பிரிவினர் வருகை பதிவேட்டில் கையெழுத்திடா மல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.