அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேற்பனைக்காடு ஒன்றிய குழு உறுப்பினர் (வார்டு-5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜோதி மேகவர் ணத்திற்கு மேற்பனைக்காடு ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு நடை பெற்றது. வெள்ளி மதியம் மேற்பனைக்காடு பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வேட்பாளர் ஜோதி மேகவர்ணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பை யா, மார்க்சிஸ்ட் கட்சி காதர்மீரா, கன்னையா, மலைமுருகன், ஜான், நாராயணமூர்த்தி, திமுக நிர்வாகிகள் பஷீர்அகமது, சேக்மீரா, அன்வர்அலி, குமரேசன், அப்துல்லத்திப் உள்பட திரளா னோர் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜோதி மேகவர்ணத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத்மணி போட்டியிடுகிறார். வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட வேட்பாளர் வினோத்மணி.