tamilnadu

img

சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருச்சிராப்பள்ளி, பிப்.10- திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திங்களன்று ஆட்சியர் சிவராசு தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜங்சன் பகுதி செயலாளர் ரபீக் அஹமது கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் நிற்கும் இடத்தின் நுழைவாயில்க ளில் தனியார் பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன. அரசு பேருந்தில் செல்ல வரும் பயணிகளை தனியார் பேருந்து களில் ஏற புரோக்கர்கள் நிர்பந்திக் கின்றனர். இது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் அரசுக்கு வர வேண்டிய வருவாயை தடுக்கும் வேலையை தனியார் பேருந்து புரோக்கர்கள் செய்கின்றனர்.  தனியார் பேருந்து நிலையம் தனியாக உள்ள நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்களை வழிமறித்து தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய வற்புறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் தெரிவித்திருந்தார். மனு வை அளித்த போது சிபிஎம் பகுதிக் குழு உறுப்பினர் தேவநாயகம் உடனிருந்தனர்.  

நெற்பயிரில் நோய்கள் தாக்குதல் 
இதே போன்று தமிழ்நாடு விவசா யிகள் சங்க புறநகர் மாவட்ட பொருளா ளர் ஆட்சியரிடம் கொடுத்த மனு வில், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 20000 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் பரவலாக குலைநோய், புகையான் மற்றும் நெல்பழம் போன்ற நோய் கள் தாக்கியுள்ளன. குறிப்பாக கிளி யூர், பத்தாளப்பேட்டை, திருநெடுங் குளம், வாழவந்தான்கோட்டை, அசூர் போன்ற வருவாய் கிராமங்களில் இந்நோய்கள் கடுமையாக தாக்கி யுள்ளது.  இதனால் பெரும் அளவில் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயி களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும். எனவே அரசு நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் என மனுவில் தெரிவித்தி ருந்தார். மனுவை வழங்கி போது விவ சாயிகள் கருப்புசாமி, கலியப்பெரு மாள், ஜெயராமன், விஜயகுமார், சுப்ரமணி ஆகியோர் உடனிருந்தனர்

பன்றிகளால் நெற்பயிர்கள் நாசம்  
தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர் பழனிவேல். ஆட்சியரி டம் கொடுத்த மனுவில், திருவெறும் பூர் வட்டம் மலைக்கோவில் கிராம புறங்களில் நெற்பயிர்கள் பயிரி டப்பட்டு நெய்பயிர்கள் அறுவடை பருவத்தில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்து வருகின்றன.  திருவெறும்பூர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்தி விவசா யத்தையும், விவசாயிகளை பாது காத்திட அரியமங்கலம், பொன்மலை  கோட்ட உதவி ஆணையர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.