திருச்சி
தமிழகத்தில் தொடர்ந்து ஆட்டம் காட்டி வரும் கொரோனா எனும் ஆட்கொல்லி வைரஸ் இதுவரை 28 மக்கள் பிரதிநிதிகளை (26 எம்எல்ஏ, 2 எம்பி) மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
நேற்று பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஞாயிறு) திருச்சி மாவட்டத்தின் முக்கிய நகரான மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கொரோனா பாதித்த மொத்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.