tamilnadu

img

தோழர் உமாநாத் நினைவு தினம்

தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்து. புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரத் தலைவர் எஸ்.விக்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*****************

தோழர் ஆர். உமாநாத் நினைவு தினம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனுசரிக்கப் பட்டது. நகரக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவாஞ்சலி கூட்டத்திற்கு நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்து தோழர் ஆர்.உமாநாத் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் தெ.சந்திரா,மூத்த கட்சி உறுப்பினர் பி.சந்திரகாசன், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் கே.அகோரம், ப.தெட்சிணாமூத்தி ஆகியோர் நினைவஞ்சலி உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் எம்.சிராஜுதீன். பி.கலைச்செல்வி, ஆர்.மகாதேவன், விவசாயிகள் சங்க நகரச் செயலாளர் ஜி.மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகரச் செயலாளர் கே.பிச்சைக்கண்ணு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.