tamilnadu

தோழர் ஆதிகுருசாமி காலமானார்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 30- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளரும், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான தோழர் ஆதிகுருசாமி புத னன்று அதிகாலை கால மானார். அன்னாரது உடலுக்கு திருச்சி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சிறப்பு ஆலோசகர் சுடலையாண்டி, மாவட்ட தலைவர் எம்.வி. செந்தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் மதிவாணன், துணைத்தலைவர் சிராஜூ தீன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, துணைத்தலைவர் கே.எம்.ராஜேந்திரன், ஜாக்டோ– ஜியோ சந்திரசேகரன், உது மான் அலி, மகளிரணி மதனா,  ஓய்வுப்பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் பிச்சுமணி, திருச்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட தலை வர் தியாகராஜன், உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.