திருச்சிராப்பள்ளி, ஜூன்,10- சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட 2வது மாநாடு துவாக்குடியில் ஞாயிறு அன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் திருவேட்டை துவக்கவுரையாற்றினார். மாநாட்டில் புதிய தலைவராக எம்.பன்னீர்செல்வம், செயலாளராக கே.சிவராஜன், பொருளாளர் எஸ்.சம்பத், துணைத்தலைவர்களாக ஏ.பழனிவேலு, கே.தங்கவேலு, பி.பூமாலை, கே.பழனிசாமி, கே.அருணன், எஸ்.எம்.ஷாஜகான், துணை செயலாளர்கள் ஜெ.சண்முகம், கே.நவமணி, ப.பிரபு, ஆர்.குமாரவேலு, கனகேந்திரன்(எ) ராஜா உள்பட 25 பேர் புதிய நிர்வாக்குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் திருச்செல்வம் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத் தனது பிறந்தநாள் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரின் நினைவு நாளையொட்டி சென்னை அயனாவரம் நிர்மல் பள்ளிக்கு ரூ.5000 நன்கொடையை சிஐடியு மாநில துணைத்தலைவர் திருவேட்டை, மாநில துணை பொதுச்செயலாளர் திருச்செல்வம் ஆகியோரிடம் வழங்கினார்.