கும்பகோணம், ஜூலை 5- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சோழபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சுவாமிமலை தேரடி அருகில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சின்னதுரை தலைமையிலும், சோழபுரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் கட்சியின் தலைவர் கும்பகோணம் அரசன் தலைமையிலும் நடைபெற்றது. இந்நிலையில், அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டம் செய்ததாக சுவாமிமலை போலீசார், சுவாமிமலை போராட்டத்திற்கு தலைமை ஏற்ற சின்னத்துரை உள்ளிட்ட சிலர் மீதும், திருப்பனந்தாள் போலீசார் சோழபுரம் போராட்டத்தில் தலைமை வகித்த கும்பகோணம் அரசன் உள்பட 25 பேர் மீதும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.