tamilnadu

img

ஊதிய நிலுவை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

கும்பகோணம், ஏப் 1-


தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்குஉழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதம் சம்பளம் வழங்காமல் உழைத்தவர்கள் குடும்பம் பட்டினியால் பரிதவிக்கும் நிலையில் அவர்கள் சம்பளம் பெறும் வரை காத்திருப்பு போராட்டம் செய்வதென முடிவு செய்து திங்கள் முதல்கும்பகோணம் பிஎஸ்என்எல் முதன்மைமேலாளர் அலுவலகத்தில் தொடர்காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் மாவட்டச் செயலாளர் டி.மதியழகன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.நித்தியானந்தம் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் நித்தியானந்தம் கூறும்போது, எங்கள் தொழிலாளர்கள் நிர்வாக வளர்ச்சிக்கு உழைத்து வருகிறோம் ஆனால் கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை நிர்வாகத்திற்கு உழைத்த தொழிலாளர்களின் குடும் பம் பட்டினியால் பரிதவித்து கொண்டிருக்கிறது. ஆகையால் இனியும் பொறுக்க முடியாமல் வேலைக்கு சம்பளம் கேட்டு காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளோம் நிர்வாகம் உடன்நடவடிக்கை எடுத்து தொழிலாளர் களுக்கு சம்பள பாக்கியை உடன் வழங்க வேண்டும். அதுவரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றார்.