கும்பகோணம், ஜூலை 3- தமிழ்நாடு தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழி யர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காமல், தேவையற்ற காரணங்களை கூறிவரும் அரசை கண்டித்தும், பட்டினியால் வாடும் தொலை தொடர்பு துறை ஒப்பந்த ஊழி யர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கி யை நிலுவையின்றி தரவும் கும்ப கோணம் தமிழ்நாடு தொலைத் தொடர்பு மேலாளர் அலுவலகத்தில் 2-ம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு சின்னதுரை தலைமை வகித்தார். சங்க பொறுப்பா ளர் ராஜேந்திரன், சிபிஎம் கும்பகோ ணம் நகரச் செயலாளர் செந்தில்குமார், தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மதியழகன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் நித்தியானந்தம் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், பக்கிரிநாதன், ஓய்வூதியர் சங்கம் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.