தஞ்சாவூர், ஏப்.10-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதிவேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோருக்கு வாக்குகள் கேட்டு, வல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஐந்து ஆண்டு காலம் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து 50 நாடுகளுக்கு மேல் சென்றுள்ளார் பிரதமர் மோடி. கஜா புயலால்பாதிக்கப்பட்ட போது, பிரதமர் மோடி தமிழகம் வரவில்லை. வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார். ஆனால் நாமம் தான் போட்டார்.அந்த நாமத்தை நாமும் போட வேண்டும். ஏப்ரல் 18 மோடிக்கு கெட் அவுட். பண மதிப்பிழப்பு செய்து புதிய இந்தியாவை பிறக்க செய்வேன் என்றார். தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்றார். ஸ்டெர்லைட் போராட்டத்தில்13 பேர் கொல்லப்பட்டனர். நீட் தேர்வினால்அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை. மோடியால் கொலை செய்யப்பட் டார். அதற்கு துணை போனவர்கள் தான் இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும். கடந்த ஐந்தாண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியா முழுவதற்கும் மோடி தான் வில்லன். திரைப்படத்தில் வில்லனுக்கு துணையாக வருவது போல், இபிஎஸ், ஓபிஎஸ்இருந்து கொண்டு மோடி சொல்வதை செய்துவருகிறார்கள். திமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.திமுக தேர்தல் அறிக்கைதான் கதாயநாயகன், விரைவில் ஆட்சி மாற்றம் வரும்.” இவ்வாறு அவர் பேசினார்.