tamilnadu

குழந்தை திருடர்கள் ஜாக்கிரதை...

குழந்தைகளுக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மிட்டாய் தருவார்கள். அவர்களது பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களிலும் மிட்டாய் தருவார்கள். சம்பந்தமே இல்லாமல் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு ஒருவர் மிட்டாய் கொடுத்தால் என்ன பொருள்? அந்த குழந்தையை கடத்த திட்டமிடுகிறார்கள் என்று பொருள்.தேர்தலுக்கு முன்பு அதிமுகவும் பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு கொடுப்பதாகச் சொன்ன பணம் இந்திய மக்களின் மதிப்பு மிக்க வாக்குகளை ஏமாற்றி பறிப்பதற்கான செயலன்றி வேறு இல்லை. இந்த ஜனநாயக கடத்தல் பேர்வழிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.-மதுரை ஆனையூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அ.சவுந்தரராசன்