தரங்கம்பாடி ஜூலை 2- நாகை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள திருக்க ளாச்சேரி துணை அஞ்சலகத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா திங்களன்று மாலை மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரை சாமி தலைமையில் நடைபெற்றது. பணமில்லா பரி வர்த்தனை பற்றிய விழிப்புணர்வு விளக்கம் பொதுமக்க ளிடம் எடுத்துரைக்கப்பட்டது. அஞ்சல் ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் சுஜித்குமார் முன்னிலை வகித்த பேசினார். நிகழ்ச்சியில், திருவிளையாட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு ஆயுள் காப்பீட்டு இழப்பீட்டு தொகை 36 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலை வழங்கப் பட்டது.