tamilnadu

கிருஷ்ணகிரி அருகே தொல்லியல் சான்றுகள்

கிருஷ்ணகிரி, மே 8-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கி. மீட்டர் தொலைவில் உள்ளது சின்ன ஓரப்பம் கிராமம். இங்கு வேடியப்பன் கோவில் மண்டு அருகில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புலி குத்தப்பட் டான் கல் இருப்பது தெரிய வந்தது. வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர்கள் தமிழ்ச்செல்வன், நாராயணமூர்த்தி, டேவிஸ், கணேசன், எமன் ரவி, விஜயகுமார், கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜன், மாருதி மனோகரன் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.இந்த சின்ன ஒரப்பம் கிராமத்தில் ஒரே இடத்தில் முனிஸ்வரன் கோவில், சிவன் கோவில், பெருமாள் கோவில், அம்மன் கோவில், வேடியப்பன் கோவில் என ஐந்து கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலத்தில் இரண்டு புலி குத்தப்பட் டான் கற்கள் தனித்தனியே இரண்டு இடத்தில் உள்ளது. ஒரு கையில் கத்தியை ஏந்திய வீரனின்  கல் சிறியதாகவும் நிலத்தில் புதைந்து பாதிக் கல் மட்டுமே வெளியே தெரிகிறது.இரண்டாவது கல் சுமார் ஆறுக்கு நான்கடி அளவில் உள்ளது. இந்த கல்லில் ஆடு ஒன்றைக் கொல்லும் நோக்கத்தோடு வந்த புலியை எதிர்த்து போரிட்டு மடிந்த ஓர் வீரனின் நினைவாக வைக்கப்பட்ட கல் எனவும், அதிலும் குறிப்பாக இதுவரை எந்த கல்வெட்டிலும் இல்லாத வகையில் ஆட்டின் தலையையும் சேர்த்து செதுக்கப்பட்டுள் ளது. இதுபோன்ற கல்வெட்டு வேறெங்கும் இதுவரை கண்டுபிடிக் கப்பட்டதில்லை என அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் அவர்கள் தெரிவித்தார்கள்.அதே போல் அந்த கோவில் நிலத்தில் ஆங்காங்கே இரும்பை காய்ச்சி உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான கற்கள் மற்றும் படிமங்களும் கண்டெடுக்கப்பட்டது.அங்கிருந்த மிகப்பெரிய அழிஞ்சி மரத்தில் பழங்கள் நிறைய காய்த்து பழுத்த நிலையில் உள்ளது அதை யாரும் பறிப்பதாகத் தெரியவில்லை.. அதன் அருகே உள்ள சின்னஞ்சிறு சிவன் கோவிலின் முன்புறம் ஒரு கல் பீடம் போல் தெரிகிறது. அது பண்டியில் கல் என்று சொல்லக்கூடிய சிகரக்கல் எனவும், சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் காப்பாளர் தெரிவித்தார். ஆட்டுத் தலை உருவம் கொண்ட புலி குத்தப்பட்டான் கல்லினை கிருட்டினகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவண படுத்தும் குழு சார்பில் கிருட்டினகிரி அருங் காட்சியத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்க்கக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பகுதியை தொல்லி யல்துறை மூலம் இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால் இது போல் பல தொல்லியல் வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.