tamilnadu

img

தஞ்சாவூரில் அமமுக - அதிமுகவினர் மோதல்

தஞ்சாவூர், ஏப்.11- தஞ்சை, சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32). இவர் 20 ஆவது வார்டு அ.ம.மு.க.,உறுப்பினர். அப்பகுதியில், செவ்வாயன்று குடிபோதையில் தகராறு செய்வதாக மேற்கு காவல்துறையினர், சத்தியமூர்த்தியை விசாரணைக்காக அழைத்துவந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தஅ.ம.மு.க., தஞ்சை மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட 40 க்கும்மேற்பட்டவர்கள் காவல்நிலையத்துக்கு வந்தனர். அங்கு கை, கால், நெஞ்சு ஆகியபகுதிகளில் ரத்தக் காயத்துடன் சத்தியமூர்த்தி அமர்ந்து இருப்பதை கண்டு, அவரிடம் விசாரித்த போது, ஆளும் கட்சியினர் அ.தி.மு.க.,வில் சேர வலியுறுத்தி, முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணன், மணி உள்ளிட்ட 7 பேர் தாக்கியதாக தெரிவித்தார்.இதையடுத்து,அ.ம.மு.க.,வினர், ஆளும்கட்சியை சேர்ந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் காந்தி ஆகியோருக்கு சாதகமாக காவல்துறை செயல்படுவதாக கூறி, முழக்கங்கள் போட்டு முற்றுகையிட்டனர். அப்போதுகாவல்துறை ஆய்வாளர் செங்குட்டுவன்தகவல் அறிந்து அங்கு வந்து அ.ம.மு.க.வினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அ.தி.மு.க.,பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தியின் உதவியாளரும் 26 ஆவது வார்டு செயலாளருமான மூர்த்தி, செல்போனில், அங்கு முழக்கம் இட்ட அ.ம.மு.க., நிர்வாகிகளை படம் பிடித்தார். இதைபார்த்த அ.ம.மு.க., நிர்வாகிகள் எல்லோரும் ஒன்று கூடி, நோட்டம் பார்த்து அ.தி.மு.க., வேட்பாளரிடம் தகவல் தெரிவிக்க வந்துள்ளாயா? என கேட்டு, மூர்த்தியை தாக்கியுள்ளனர். 


 இதை பார்த்தவுடன் அங்கு நின்ற காவலர்கள் , மூர்த்தியை காவல் நிலையத்துக்குள் அழைத்து சென்றனர். இது குறித்துதகவல் அறிந்த அ.தி.மு.க., பகுதி செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, அறிவுடைநம்பி, ரமேஷ், சரவணன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், காவல் நிலையத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து மேற்கு காவல் நிலையத்துக்கு அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, ஆயுதப்படை என்று 50க்கும் மேற்பட்ட காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன்பின்னர் அ.ம.மு.க, அ.தி.மு.க., ஆகியஇருதரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை டவுன் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார். இதன் பின்னர் தஞ்சை கோட்டை பகுதி அ.தி.மு.க., தொழில்நுட்பபிரிவு செயலாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் அ.ம.மு.க.,வைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ், அதே போல் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சரவணன், மணிகண்டன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.