திருச்சிராப்பள்ளி:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு சமயபுரம் வி.கே.எஸ்.மஹாலில் தோழர்கோ.வீரய்யன் நினை வரங்கத்தில் திங்களன்று நடைபெற்றது.
மாநாட்டிற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வாசித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.விஜயராகவன் துவக்கவுரையாற்றினார்.கடந்த காலங்களில் நடைபெற்ற இயக்கங்கள் மற்றும்எதிர்கால கடமைகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பேசினார். கிராமப்புற உழைப்பாளிகளின் வாழ்வு மேம்பட என்ற தலைப்பில் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜி.மணி, ஒன்றுபட்டால் நிலப் பகிர்வு சாத்தியமே என்ற தலைப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் பேசினர்.தீர்மானங்களை முன்மொழிந்து திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகிகள் வசந்தாமணி, மொக்கராஜ். சின்னதுரை, பக்கிரிசாமி, துரைசாமி, கணபதி, மலைவிளைபாசி, அண்ணாமலை, ஸ்டாலின், பூங்கோதை, முத்து ஆகியோர் பேசினர். மாநாட்டில் அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு நிறைவுரையாற்றினார். முன்னதாக மாநிலச் செயலாளர் ஏ.பழநிசாமி வரவேற்றார். நிறைவாக மாவட்ட துணைச்செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.