tamilnadu

img

மது ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

பொன்னமராவதி, மே 25-தமிழகத்தில் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் பொன்னமராவதியில் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். புகையிலை பொருட்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கோடி மக்களிடம் கையெழுத்துப் பெற்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பும் நோக்கில் சர்வா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் அதன் நிர்வாகி தமிழ்வேந்தன் தலைமையில் பொன்னமராவதியில் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, மது, புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.