பெரம்பலூர், ஏப்.6-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாய சங்கத்தினர் தொகுதி வாரியாக சென்றுதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம்விநியோகம் செய்து ஓட்டுக் கேட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தலைமையில் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார், பெரம்பலூர் செல்வகுமார், கார்மாங்குடி வெங்கடேசன், திருப்பூர்பாலசுப்ரமணியம் மற்றும் விவசாயிகள், பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட், புதுபஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, மார்க்கெட், காந்தி சிலைபகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து திமுககூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக ஓட்டுக் சேகரித்தனர்.பின்னர் உழவர் உழைப்பாளர் கட்சிதலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறுகையில், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் உட்பட 27 விவசாயிகள் அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. இதன்படி இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறோம் என்று தெரிவித்தார்.