திருச்சி:
100 சதவீத கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள அரசுப்பள்ளி களில் மாணவர் சேர்க்கை குறித்து,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். 4 நாட்களில் 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசின் விதிமுறைகளை மீறி 100 சதவீத கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.பள்ளிகளில் தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங் களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசுப்பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்துஆய்வு செய்துவருகிறார்.