tamilnadu

img

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதை கைவிடுக! தமிழகம் முழுவதும் அனைத்து சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 22- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை- எளிய மக்களுக்கு, முறை யாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும், போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன்,  தொமுச மாவட்ட தலைவர் குண சேகரன், எச்எம்எஸ் தலைவர் ஜான்சன், ஐஎன்டியுசி தலைவர் துரைராஜ், ஏஐடியுசி தலைவர் சுரேஷ், ஏஐசிசிடியு தலைவர் தேசி கன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி, அங்கன்வாடி சங்க ராணி, சித்ரா டிஆர்இயு கண்ணன், கரிகாலன், ராஜா, மகேந்திரன், சங்கர் கலந்து கொண்டனர்.  திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், தென்னூர், மன்னார்புரம், கைலாச புரம் உள்பட 94 மையங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ராமர், வீரமுத்து, ஜெயபால், மணிகண்டன், சந்திரன், ராமச்சந்திரன், கருணாநிதி, சீனிவா சன், முத்துவேல், மணிமாறன், எஸ்.கே.செல்வராஜ் உள்பட 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு புறநகர் மாவட்டக்குழு சார்பில் திருவெறும்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்ட செயளாலர் சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, நிர்வாகி கள் ரவிகுமார், சண்முகம், அமீர், கருணாநிதி, சிபிஎம் ஒன்றிய செயலா ளர் நடராஜன்  கலந்து கொண்டனர்.  அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பெல் தொழிற்சாலையின் 6 வாயிற்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெல் சிஐடியு சங்க நிர்வாகிகள் பிரபு, அருணன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  துப்பாக்கி தொழிற் சாலை முன் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு கன்வீனர் சரவ ணன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 சிஐடியு புறநகர் மாவட்டக்குழு சார்பில் புறநகர் ஒன்றிய தலை நகரங்களில் 50 மையங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் உள்பட 1000க்கும் மேற்பட்ட தொழிளாலர்கள் கலந்து கொண்டனர்.  திருச்சி சிஐடியு புறநகர் மாவட்டக்குழு சார்பில் மண்ணச்ச நல்லூர் (கிழக்கு, மேற்கு), லால்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் துறையூர் ஒன்றியங்களில் சிஐடியு நிர்வாகிகள் சம்பத், பூமாலை, பன்னீர்செல்வம். தியாகராஜன், வெள்ளைசாமி, ஷாஜகான், ராஜா, ராமநாதன், முருகேசன், ஆனந்த், கனகராஜ், சப்தரிஷ், குமார் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் 
நாகையில் அரசுப் போகு வரத்துத் தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. சங்கத்தினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து (குடந்தை  மண்டலம்) நாகைப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிலாளர் முன்னேற்றச் சங்க நாகைக் கிளைச் செயலாளர் இடும்பன்சாமி தலைமை வகித்தார். போக்குவரத்து ஊழியர் சம்மேளன நிர்வாகி எஸ்.ஆர்.ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் அ.தி.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு, சங்கத்தின் கிளைச் செயலாளர் ஆர்.சண்முக சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் சிறப்புரை யாற்றினார். ஏ.பஞ்சநாதன், சரவணன், வி.இராமலிங்கம், ஜி. அருள், கே.அய்யப்பன், முருகை யன், சரவணன், முருகானந்தம், து. இளவரசன், எம்.தமிழ்வாணன், சொ.கிருஷ்ணமூர்த்தி, பி.ஆசைத் தம்பி, எம்.பி.குணசேகரன், கே.பக்கிரிசாமி, கணபதி, ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.