tamilnadu

பாஜக கூட்டத்திற்கு சென்ற 6 பெண்கள் படுகாயம்

பொன்னமராவதி, ஏப்.3-புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லேணா விளக்கில்நடந்த அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு,சரக்கு வாகனத்தில் தங்களது ஊர் நகரப்பட்டி அருகில்உள்ள ஈச்சம்பட்டிக்கு வரும் வழியில் உள்ள சுந்தரசோழபுரம் அருகில் கீழப்பட்டி வளைவில் வந்த போது அரசுப்பேருந்து மோதியதில் ஈச்சம்பட்டியை சேர்ந்த பெண்கள் படுகாயமடைந்தனர்.மஞ்சுளா (27), மஞ்சுளா (33), ராஜேஸ்வரி (34) ஆகியோர் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மஞ்சுளாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளார். பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் ஈச்சம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி, சங்கம் பட்டியைச் சேர்ந்த ராஜாமணி ஆகிய இருவரும் சிகிச்சைபெற்று மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர்.