திருச்சிராப்பள்ளி, ஆக.17- மருத்துவ மாணவர்களுக்கு பிற்படு த்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுகீட்டை இந்த ஆண்டே அமுல்படு த்தக்கோரி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தீங்கள்கிழமை பல்வேறு இட ங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மாணவர் சங்க மா வட்ட தலைவர் துளசிதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மணப்பாறை வட்டம் ஆவாரம்பட்டியில் வட்ட தலை வர் இளையராஜா தலைமை வகித்தார். தா.பேட்டை கடைவீதியில் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். புள்ளம்பாடி ஒன்றியத்தில் கல்லக்குடி பேருந்து நிலையம் முன்பு ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். லால்குடியில் ஒன்றிய செயலாளர் திலக்பிரபு தலை மை வகித்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் துரை.நாராயணன் தலைமை வகி த்தார். மாணவர் சங்க மாநில க்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா உள்ளி ட்டோர் பேசினர். கறம்பக்குடியில் மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். இதேபோல கந்தர்வகோட்டை, அறந்தா ங்கி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பா ட்டங்கள் நடைபெற்றன.
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருளரசன் தலைமை வகித்தார்.