tamilnadu

103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருச்சி அப்போலோ டாக்டர்கள் சாதனை

திருச்சிராப்பள்ளி, பிப்.22- பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 103 வயது முதியவர்  துரைசாமிக்கு அரை இடுப்பு  மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்றது.   இதுகுறித்து அப்போலோ மருத்துவ மனையின் எலும்பு மற்றும் மூட்டு மாற்று  அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்கீதா யன் நிருபர்களிடம் கூறியதாவது: பெரம்பலூர்  மாவட்டத்தை சேர்ந்த 103 வயது முதியவர்  துரைசாமி இடும்பு எலும்பு முறிவு ஏற்பட்டு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு பலன ளிக்காமல் கடந்த 50 நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இடுப்பு எலும்பு முறிவினால் நீண்ட நாள் படுத்த படுக்கையில் இருந்த தால் அவரது கால் நரம்புகளில் இரத்தக்கட்டு  மற்றும் படுக்கைப் புண்கள் ஏற்பட்டு மிகவும்  அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் திருச்சி அப்போலோ மரு த்துவமனையில் துரைசாமி அனுமதிக்கப்ப ட்டார். இவருக்கு இருதய சிகிச்சை நிபுணர்,  பொது மருத்துவர் மற்றும் மயக்க மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவினரால் அறு வை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு எலும்பு  மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மரு த்துவர் அருண்கீதாயன் தலைமையில் அரை  இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகர மாக நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நட க்கவும் வலியின்றி உட்காரவும் முடிந்தது. முதியோருக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வயது ஒரு தடை இல்லை. ஏனெனில் இடுப்பு எலும்பு முறி வுகள் மற்றும் பிற பலவீனமான எலும்பு முறி வுகள் (ஆஸ்டியோபோரோசிஸ் காரண மாக) வயதானவர்களுக்கு பொதுவாக ஏற்படு கின்றன. இந்த வயதில் நீடித்த படுக்கை ஓய்வு,  நுரையீரல் நோய்த் தொற்று, சிறுநீர் தொற்று,  கால் நரம்புகளில் இரத்த உறைவு மற்றும் படுக்கை புண்கள் போன்றவற்றிற்கு வழி வகுக்கிறது. இவை இறுதியில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவ மனையில் இவரைப் போன்ற வயது முதிர்ந்த  நோயாளிகளுக்கு மிகச் சிறந்த மருத்துவர்கள்  மற்றும் மருத்துவ தொழில் நுட்ப வசதிகளை கொண்டு மருத்துவக் குழுவினர்களால் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான மருத்துவ சிகிச்சை வழங்குகிறோம் என்றார்.  மயக்கவியல் நிபுணர் கார்த்திக், திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவ நிர்வாகி மருத்துவர் சிவம் ஆகியோர் உடனி ருந்தனர்.