புதுதில்லி:
ஐபிஎல்-2020 கிரிக்கெட் போட்டிகளுக்கான (Indian Premier League - IPL) டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக, சீனா நிறுவனமான ‘விவோ’ (VIVO) அறிவித்து உள்ளது.
சீனாவின் பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, கடந்த2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்ஏலத்தின் போது, ரூ. 2 ஆயிரத்து 199கோடியை செலுத்தி, 5 ஆண்டு காலத்திற்கு, ஐபிஎல் போட்டி டைட்டில் ஸ்பான்சர்ஷிப்-பைக் கைப்பற்றியது. இதன்படி 2022 வரை ‘விவோ’ நிறுவனம்தான், ஐபிஎல் விளம்பரதாரர்.ஆனால், அண்மையில், இந்திய - சீன துருப்புகளுக்கு இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை புறக் கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இந்திய அரசு, சீன செயலிகளுக்குதடை விதித்ததுடன், சீன நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பலவற்றையும் ரத்து செய்தது. சீனப்பொருள் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.அவ்வாறிருக்கையில், ஐக்கிய அரபுநாடுகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் சீனாவின் ‘விவோ’ நிறுவனம் விளம்பரதாரராக இருப்பது, சர்ச்சையை கிளப்பியது. ‘விவோ’ நிறுவனம் வழக்கம் போல ஐபிஎல் விளம்பரதாரராக தொடரும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான ‘பிசிசிஐ’ சூசகமாகவெளியிட்ட அறிவிப்பு, சர்ச்சையை அதிகரித்தது.இதையடுத்து, ‘விவோ’ நிறுவனம்தானாகவே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்-பில்இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.