tamilnadu

img

அரசு மருத்துவமனைக்கு  இடம் தானம்

 மன்னார்குடி, ஆக.20- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த சித்த மல்லி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தியும், மருத்துவ மனைக்கு புதிய கட்டிடங்கள் கட்டி விரிவாக்கம் செய்திடும் வகையில் பணிகள் துவங்கிட ரூ.2 கோடி நிதி சுகாதாரத் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மருத்துவமனையை விரிவாக்கம் செய்திட போதிய இடம் இல்லாததால் மருத்துவமனை எதிரே உள்ள நாகை முன்னாள் எம்.பி.யும், தி.மு.க மாநில விவசாய அணி செய லாளருமான ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கர் நிலத்தை தானமாக சுகாதாரத்துறைக்கு வழங்குவதென முடிவு செய்தனர். முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திர பதிவு ஏ.கே.எஸ்.விஜயன் குடும்பத்தி னர் மற்றும் வாரிசுகள் கையெழுத்திட்டு அதற்கான பத்தி ரத்தை சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஸ்டாலின் மைக்கேலிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், ஏ.கே.எஸ்.விஜயன் குடும்பத்தினர், கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டு ஏ.கே.எஸ்.விஜயன் குடும்பத்தினரை பாராட்டினர்.