படத்திறப்பு நிகழ்ச்சி
மன்னார்குடி, டிச.30- மார்க்சிஸ்ட் கட்சி முத்துப்பேட்டை நகரச் செயலாளர் சி.செல்லதுரை தாயார் சி. பட்டம்மாள் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்து பட்டம் மாள் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் கே. பால சுப்பிரமணியன், மன்னார்குடி நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம், மத்திய சென்னை காங்கிரஸ் மாவட்டச் செயலா ளர் கே.முருகையன், விசிக மாவட்டப் பொரு ளாளர் ஆ. வெற்றிவேல், சிபிஐ நகரச் செயலாளர் கே. மார்க்ஸ், தமிழ் இலக்கிய மன்ற தலைவர் நா. ராஜ்மோகன், மூத்த குடிமக்கள் பேரவை பொறுப்பாளர் ஜி.சக்திவேல், தமுஎகச மாவட்ட நிர்வாகி கள் கே. வேதரெத்தினம், எம்.சண்முகம், மருத்துவர் கே.இளங்கோ, பேட்டை பி.சிவா, ஆர்எஸ். ராமநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வாக்குச்சீட்டில் வேட்பாளர் சின்னம் விடுபட்டதால் குழப்பம்
சீர்காழி, டிச.30- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக் கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்றது. கொள்ளிடம் ஒன்றிய 20 வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அ.தி.மு.க கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளராக ஜலபதி என்பவரும் தி.மு.க வேட்பாளராக அங்குதன் மற்றும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்ற னர். 20-வது வார்டைச் சேர்ந்த கூழை யாறு கிராமத்தில் உள்ள வாக்குச்சா வடியில் மொத்தம் பதிவான வாக்கு கள் 660 ஆகும். இதில் தே.மு.தி.க வின் முரசு சின்னம் விடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து தேர்தல் அலுவலர் சரவணன் கூறுகை யில், இச்சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார். கூழையாறு வாக்குச்சாவடியில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
குளத்தில் மூழ்கி விவசாயி பலி
சீர்காழி, டிச.30- நாகை மாவட்டம் சீர்காழி அருகே மத்தலமுடையான் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் பன்னீர்ல்வம் (56) விவசாயி. இவர் சம்பவத்தன்று மாலை தனது வயலை ஒட்டியுள்ள லிங்கச்செட்டி குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி தலைமையிலான வீரர்கள், நீண்ட நேர தேடலுக்கு பின்னர் பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி புதுப்பட்டினம் காவலர்கள் விசாரிக்கின்றனர்.