திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 410 பேர் கொரோனா நோய் தடுப்பு விழிப்பு ணர்விற்காக அவரவர் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் என்ற பட்டியலின் அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களது வீடுகளில் இவர்களைப் பற்றிய அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களோடு சுகாதாரத் துறையினர் தொடர்பில் உள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை தொலைபேசி வாயிலாக அவர்களது உடல் நிலை குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படு கிறது. அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை. அவர்களை தனிமைப்படுத்து வது சிரமப்படுத்துவது என்ற நோக்கம் அரசிற்கு இல்லை. முன்னெச்சரிக்கைக்காக கண்கா ணிக்கப்படுகின்றனர். தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து மக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தின ரையும் பாதுகாத்துக் கொள்ள அரசிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சுயக் கட்டுப்பாட்டுடன் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வைரஸ் நோய்த்தொற்றை முறிய டித்திட மக்கள் முன்வர வேண்டும் என திருவாரூர் ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்தார்.