tamilnadu

கம்யூனிஸ்டுகள் குறித்து அவதூறு இந்து முன்னணியினர் மீது சிபிஎம் புகார் மனு

 திருத்துறைப்பூண்டி, ஜூலை 9- இந்து முன்னணி மாநில தலைவரை கைது செய்ய க்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு சார்பில்  திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புதனன்று புகார் மனு  அளிக்கப்பட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செய லாளர் கே.ஜி.ரகுராமன் அளித்துள்ள புகார் மனுவில், இந்திய  சுதந்திர போராட்டம் துவங்கி தற்போது வரை தேச நலன்களில்  முன்நின்று பல்வேறு தியாகங்கள் புரிந்த கம்யூனிஸ்டுகள் மீது  தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்மு றையை தூண்டும் விதமாகவும், உலகையே அச்சுறுத்திக் கொ ண்டிருக்கும் கொரோனோ காலத்தில் 144 தடை உத்தரவை யும் மீறி அமைதி குலைவை ஏற்படுத்தும் விதமாகவும், உண்மைக்கு புறம்பாகவும் அவதூறு சுவரொட்டிகளை ஒட்டும்  இந்து முன்னணியினரை வன்மையாக கண்டிக்கிறோம்.  இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பி ரமணியம் தூண்டுதலின் பேரில் மேற்கண்ட போஸ்டரை ஒட்டிய நகர இந்து முன்னணி நிர்வாகிகள் மீதும் போஸ்ட ரில் ஒட்டப்பட்டுள்ள தொடர்பு எண் கொடுத்துள்ள நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாது காத்திடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என தெரி விக்கப்பட்டுள்ளது.