tamilnadu

img

ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக! சிஐடியு, தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

குடவாசல், ஆக.12- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி  இயக்குனர்கள், தூய்மைப் பணியா ளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள்  சிஐடியு சங்கத்தின் சார்பாக தங்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி குடவாசல் ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்று கைப் போராட்டம் நடத்தினர். பணி விதிகளுக்குப் புறம்பாக, அரசு விதிமுறைக்கு முரணாக பணி  ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். குடவாசல் ஒன்றி யத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கிகள், ஊதியக்குழு நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். திருவீழிமலை ஊராட்சியில் ஓராண்டு  காலமாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனே ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு அறிவித்தபடி அடை யாள அட்டை மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனைவ ருக்கும் வழங்கிட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே  புதன்கிழமை முற்றுகைப் போராட்டம்  நடைபெற்றது. சங்கத்தின் வடக்கு ஒன்றிய செய லாளர் கே.காத்தலிங்கம் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலா ளர் கே.ஆறுமுகம் முன்னிலை வகி த்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி த்துறை ஊழியர் சம்மேளன மாநில தலைவர் நா.பாலசுப்பிரமணியன் கோரிக்கையை விளக்கி கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி, சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் டி.கலி யமூர்த்தி, தூய்மை காவலர் சங்க த்தின் மாவட்ட செயலாளர் எஸ்.காம ராஜ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்ட னர்.  குடவாசல் வட்டார வளர்ச்சி அலு வலர் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்கத்தின் தலைவர்கள் ஈடுபட்டனர்.