மன்னார்குடி, மார்ச் 1- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவிரி படுகை ஓ.என்.ஜி.சி. சார்பில் அதிநவீன ஸ்கேன் கருவி வழங்கும் விழா ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட் பொறுப்பு மேலாளர் மற்றும் செயல் இயக்கு நர் செழியன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் ஆட்சியர் த.ஆனந்த் கலந்து கொண்டு ரூ.22.5 லட்சம் செலவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கிய அதிநவீன ஸ்கேன் கருவியின் செயல்பாட்டை துவக்கி வைத்தார். முதுகு தண்டுவடம், கழுத்து எலும்பு, இடுப்பு எலும்பு முறிவுகளை மிகத் துல்லி யமாக கண்டுபிடிக்கும் வகையில் அமைந் துள்ள இந்த கருவி தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு மருத்துவமனைக்கு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் வழங்கியுளள்ளது. நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன், காவிரி படுகை ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் சாய் பிரசாத், காரைக்கால் முதன்மை பொது மேலாளர் விஜயராஜ், சென்னை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி வெங்கட் ராமன், துணைப் பொது மேலாளர் ராஜரகு, நரம்பியல் மருத்துவர் மணிமாறன் மற்றும் திருவாரூர் முருகானந்தம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.