குடவாசல், டிச.18- கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவா ரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஓகை யில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒரு பகுதியில், தற்காலிகமாக துவங்கப்பட்ட எம்ஜிஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 807 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக் கல்லூரியில் எந்தவித அடிப்படை வசதி களும் இல்லை. இதனால் புதன்கிழமை யன்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் கோரி ஏற்கனவே மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி, சம்பந்தப்பட்ட துறையிடம் முறை யிட்டனர். ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கல்லூரி அருகே உள்ள ஓகை ஆற்றுப்பாலத்தில் மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல் லூரிக்கென தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய கல்லூரியை உடனே துவங்க வேண் டும். தற்போது உள்ள கல்லூரியில் கழி வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி னர். தகவலறிந்து வந்த நன்னிலம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுகு மாறன், குடவாசல் வட்டாட்சியர் பரஞ் ஜோதி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கைக ளை மாவட்ட ஆட்சியர், உயர் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்வ ரிடம் கொண்டு செல்கிறோம் என தெரி வித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.