திருவாரூர், ஜூலை 24- மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அரசு -ஏழை- எளிய மாணவர்களுக்கு கல்வி யை எட்டாக்கனியாக்கும் நோக்கோடு புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்த நினைக்கிறது. இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறவுள் ளது. திருவாரூரில் செவ்வாய்க்கிழ மையன்று நடைபெற்ற சங்கத்தின் சிறப்பு மாநாட்டில் இதற்கான தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு தோல்வியால் மரணம டைந்த மாணவிகள் நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட துணைச்செயலாளர் ப.ஆனந்த் தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் பி.ஜே.சிவனேஷ்வரி இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந் தார். மாவட்ட துணைத்தலைவர் வி. வெங்கடேஷ் வரவேற்புரையாற்றி னார். மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் துவக்க உரையாற்றி னார். அதன் பின்னர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி கிளைச் செயலாளர் இரா.சிவானந்தம் தலைமையில் “புதிய கல்வி கொள்கை” குறித்த சிறப்பு அமர்வு நடைபெற்றது. மாநிலச் செய லாளர் வி.மாரியப்பன், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள தீமைகளை எடுத்துரைத்தார். இம் மாநாட்டில் மாநில-மாவட்ட நிர்வாகி கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 31 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதன் புதிய நிர்வாககிளாக ப.ஆனந்த் (மாவட்டத் தலைவர்), இரா.ஹரிசுர்ஜித் (மாவட் டச் செயலாளர்), ஜெய்சன், சிவ னேஷ்வரி, ஆகாஷ், மதன் (மாவட்ட துணைத் தலைவர்கள், வெங்கடேஷ், தீபன், சந்தோஷ், கவிதா (மாவட்ட துணைச் செயலாளர்) மற்றும் செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய கல்விக்கொள்கை குறித்து மாணவர்கள் மத்தியில் ரகசியமாக கருத்துக் கேட்கும் நடவடிக்கையை கண்டித்தும், புதிய கல்விக்கொள்கை யை ரத்து செய்திடவும் 30.07.2019 (செவ்வாய்க்கிழமை) அனைத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலை யங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது.