குடவாசல், மார்ச் 21- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி சார்பாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வலங்கைமான் பகுதியில் அனைத்து ஆட்டோக்களுக்கும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி அடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் பொறுப்பாளர் அமர்நாத் ஆகியோர் ஒருங்கி ணைப்பு செய்திருந்தனர்.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நிகழ்ச்சி ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்கள் அருண், தியாகராஜன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தரங்கம்பாடி, பொறையாறு ஆகிய பகுதிக ளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவ டிக்கையை தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர். பொறையாறு பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். முக்கிய இடங்களில் டெட்டால் மூலம் கை கழுவும் வசதி செய்துள்ளனர். மேலும் ஒலிப் பெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் பய ணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை ஆட்சியர் ஆய்வு செய்தார். ஜெயங் கொண்டம் நகராட்சி ஆணையர் அறசெல்வி, நகராட்சி மேலாளர் அரங்க பார்த்திபன், நக ராட்சி உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை கலந்து கொண்டனர்.